|Index |Contact
 
 
 

 
 

ஆசனவாய் பிரச்சனைகள்- மூலம், ஆசனவாய் வெடிப்புகள், பவுத்திரம்

 

மலத்துவாரத்தில் எந்த ஒரு தொந்தரவு ஏற்பட்டாலும் அது மூலம் அதாவது பைல்ஸ் (Piles)  என்று நினைக்கிறோம் ஆனால் ஆசனவாயை மூலம் பவுத்திரம் வெடிப்புகள் என ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் வித்தியாசமானவை
     மூலம் அதாவது பைல்ஸ் (Piles)

                      மூலம் என்பது மலக்குடலின் உட்சுவரில் உள்ள ரத்தக்குழாய்கள் புடைத்து தொங்குவதால் ஏற்படுகிறது இதில் உள்மூலம் வெளிமூலம் என்ற வகைகளுண்டு . மலம் கழித்த பின் சொட்டு சொட்டாக ரத்தக் கசிவு இருந்தாலோ அது தொடர்ச்சியாக சில மாதங்கள் கழித்து மலம் கழிக்கும் போது திராட்சை கொத்து போல ஆசனவாயை விட்டு வெளியே வரும் போது மூலம் தோன்றியுள்ளது என்பதை கணித்து கொள்ளலாம் ஒரு சிலருக்கு மலம் கழித்த பின்னும் வெளியே தோன்றும் ரத்தநாள குத்துக்கள் உள்ளே செல்லாமல் தொடர்ந்து இருக்கும் கையை விட்டுவிட்டு உள்ளே தள்ளுபடி சிரமப்படுவார்கள் ஒரு சில சமயங்களில் தொடர்ந்து மூலம் வெளியில் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள் மலம் கழிக்கும் ஒவ்வொரு முறையும் ரத்த கசிவு அதன்பின் எரிச்சல் வலி என உபாதைகள் தொடர்ச்சியாக இருப்பதால் பணிகளை செவ்வனே செய்ய முடியாது. ரத்தக் கசிவு அடிக்கடி ஏற்படுவதால் ரத்தசோகை ஏற்படுவது மூலம் மிகவும் களைப்பாக இருக்கும் ஒரு சிலர் மிகவும் ஒல்லியாக மாறிவிடுவார்கள். ரத்தக் கசிவு ஏற்பட்ட இடத்தில் நுண் கிருமிகள் தாக்கினால் எப்போதும் வலி இருந்து கொண்டே இருக்கும் அதோடு பசை போன்ற திரவம் சுரந்து கொண்டே இருப்பதால் உள்ளாடைகளை அனைத்து அவ்வப்போது அரிப்பையும் கொடுக்கும். ஆசனவாயில் ஏதோ ஒரு பொருள் வைத்து அடைத்தார் போல உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
                மூலம் தோன்ற முக்கிய காரணம் மலச்சிக்கல் தான். ஒரு சிலருக்கு பரம்பரையாகவும் தோன்றுவதுண்டு கல்லீரல் பிரச்சனைகள் உள்ளுறுப்புக்களில் கட்டிகள் போன்றவை வளர்ந்து மலக்குடலை அழுத்தும் போது மூலம் தோன்றுவது உண்டு கர்ப்பிணி பெண்களுக்கு கடைசி மாதங்களில் மூலம் தோன்றுவது பரவலாக இருக்கும் பிரசவத்திற்கு பின் சீர் ஆகிவிடுவார்கள்நீண்ட நேரம் நின்று கொண்டு உட்கார்ந்து கொண்டு பணி செய்யும்  பணியாளர்களுக்கு மூலம் அதிகமாக பாதிப்பை உருவாக்குகிறது உதாரணமாக தையல்காரர்கள் நடத்துனர். வழக்கறிஞர்கள் அலுவலக  சிப்பந்திகள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு சிகிச்சை என்று எடுத்துக்கொண்டால் அறுவை சிகிச்சை தான் நிவாரணம் என்று பலர் நாடி சிகிச்சை பெறுவார்கள் மீண்டும் தோன்றும் போது மாற்று மருத்துவம் உதவியை நாடுவார்கள் ஹோமியோபதி மருத்துவத்தைப் பொறுத்த வரையில் மூலத்திற்கு சிறப்பான மருந்துகள் உண்டு இவை ரத்தக்குழாய் புடைப்பை எளிமையாக சீர்செய்து மீண்டும் வராமல் குணப்படுத்தி உள்ளது.
          ஆசனவாய் வெடிப்புகள்       

ஆசனவாய் வெடிப்புகள் பலருக்கு இந்நிலை கொடுத்து வருகிறது மூலம் ஆசனவாய் வெடிப்பு இருக்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு காலில் வெடிப்பு ஏற்படுவது போல மலத்துவாரத்தில் வெடிப்பு ஏற்பட்டு ரத்த கசிவை ஏற்படுத்தலாம் அப்படி ஏற்படும் இரத்தக்கசிவு மலம் மீது கோடு போட்டது போல ரத்தக்கசிவு தோன்றும் மலம் கழித்த பின் எரிச்சல் வலி இருக்கும் பாதிக்கப்பட்ட பகுதி அதன் தன்மைக்கு ஏற்ப சுத்தத்தை சுத்தம் செய்யும்போது தடிமனாக தோன்றுவதால் இது மூலமாக இருக்குமோ என்ற ஐயத்தை பலருக்கு ஏற்படுத்தும் இதற்கு முதன்மையான காரணம் மலச்சிக்கல் தான் மிகவும் இறுகி கடினமாகி வெளியேற்ற முக்கும் போது மல துவாரத்தை கிழித்துக் கொண்டு மலம் வெளியேறுவதால் காயத்தை ஏற்படுத்துகிறது அதுவே வெறுப்பாக மாறி விடுகிறது
                   மூலத்தை போல அதிக ரத்தக் கசிவு இல்லாமல் இருப்பது இதை வித்தியாசப்படுத்தி அறிய மருத்துவர்களுக்கு உதவும்

பவுத்திரம
                             ஆசனவாயை சுற்றி பாதிக்கும் பவுத்திரம் ஒருபுறம் மிகுந்த தொல்லையை கொடுக்கும் இதை மருத்துவத்தில் பிஸ்டுலா ஏனோ ஏனோ என்று குறிப்பிடுவதாக குறிப்பிடுவார்கள் இந்த பவுத்திரம் என்பது ஆசன வாயை சுற்றி ஏற்படும் புரையோடிய புண்கள். மலக்குடலின் உட்சுவரில் சிறுசிறு சுரப்பிகள் உள்ளன இவைகள் இறுகிய மலம் மற்றும் கிருமிகள் தாக்குதல் ஏற்படுத்தும்போது அவைகள் புண்ணாகி விடுகின்றன. இந்த புண்கள் புரையோடி ஆசனவாயை சுற்றியுள்ள தசைகளுக்கு ஊடுருவி மரத்திற்கு வெளியே சற்று தள்ளி சிறு புடைப்புகள் புடைப்புகள் ஆகவும் பிறகு சீழ்கட்டிகள் ஆகவும் உருவாகி மிகுந்த வலியை கொடுக்கும் சிறு கட்டிகள் மிகுந்த வலியை கொடுக்கும் அது உடைந்த உடன் சீல் வெளிப்பட்டு மிகுந்த துர்நாற்றத்துடன் காணப்படும் பிறகு மிக நலமுடன் சிறிதுகாலம் இருப்பார்கள் பிறகு பாதிக்கப்பட்ட இடத்தில் நீர் மீண்டும் வர ஆரம்பிக்கும் மீண்டும் கட்டிகள் உருவாகலாம் ஒருசிலருக்கு மற்ற இடங்களிலும் இதுபோன்று ஆசன வாயை சுற்றிலும் உருவாகலாம் இவை அனைத்தும் உள் சுவரில் இருந்து ஆசனவாய்க்கு வெளிச்சுவரில் ஒரு குழல் போல தொடர்புகொண்டு புண்கள் ஆறாமல் தொடர்ந்து இருக்கும்
                               மல குடலின் உட்பகுதியில் இருந்து ஆசனவாய் வெளி பகுதிக்கு ஒரு பாதையை ஏற்படுத்தி அது நாள்பட நாள்பட கால்வாய் ஏற்படுத்திய கான்கிரீட் போட்டதுபோல ஒரு நிரந்தர செல் அணுக்களால் ஆன பாளம் சுவர் ஏற்பட்டு தொந்தரவுகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று பலர் நாடி மீண்டும் தொடர்கதையாகும் போது ஹோமியோபதி மருத்துவம் பலருக்கு கை கொடுத்துள்ளது
ஆசனவாய் தொந்தரவுகளுக்கு முக்கிய முதன்மையான காரணமாக இருப்பது மலச்சிக்கல் தான் மலச்சிக்கலைத் தடுக்க தினசரி காலை கண்களை சரியான நேரத்தில் கழிக்க பழகிக் கொள்ள வேண்டும் மலம் கழிக்கும் உணர்வு அனிச்சை செயலாக செயல் புரியும் உணவில் காய்கறிகள் பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும் மலச்சிக்கல் இருந்தால் கேழ்வரகு கூழ் இரவில் குடிக்கும்போது நல்ல பலன் கொடுக்கும். ஹோமியோபதி மருத்துவத்தைப் பொறுத்த வரையில் மலக்குடலில் ஏற்படும் குறைகள் ஹோமியோபதி மருந்துகளை தெரிவுசெய்ய கைகாட்டி களைப் போல உதவி செய்யும் உதாரணமாக சாப்பிட்டபின் மலம் கழிக்கும் உணர்வு மலம் கழித்து முழுமையாக இல்லாத உணர்வு எரிச்சல் வலி போன்றவை மூலம் மூலம் பவுத்திரம் ஆசன வாய் வெடிப்பு போன்ற நோய்களின் தன்மைக்கேற்ப மருந்துகளை தெரிவுசெய்ய உதவி செய்யும் எனவே ஆசனவாய் தொந்தரவுகளுக்கு ஹோமியோபதி மருத்துவம் முழுமையான தீர்வை அளிக்கும்.பெரும்பாலும் அறுவை சிகிச்சை தவிர்க்கலாம்
மூலத்தைப் பொறுத்தவரையில் ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக குறிகளின் அடிப்படையில் வேலை செய்து சுருங்க செய்வதால் பைல்ஸ் விரைவாக குணமாகும் வெடிப்புகளை பொருத்தவரையில் ஆசனவாயில் உள்ள சுருக்குத் தசைகளில் சிறப்பாக பணிபுரிந்து வெடிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மாற்ற வல்லவை பவுத்திரம் ஹோமியோபதி மருத்துவத்தில் சிறப்பான அணுகுமுறையால் புரையோடிய புண்களை நார் திசுக்களை  கரைக்கும் திறன் கொண்டவை என்பதை நோயாளிகளின் அனுபவத்தின் மூலம் அறிந்து கொ
ள்ளலாம்

Dr,R,Gnanasambandam M.D(Hom)
Editor, Homoeo Times 
9677155933

Homoeotimes
6, LLoyd's IInd Lane
Royapettah, Chennai
Tamil Nadu. India.
 
Pin : 600 014
 
Phone : 91-44-28113300
 
Email: homoeotimes@gmail.com