|Index |Contact
 
 
 

 
 

நோய்களின் பிறப்பிடம் உடலா? மனமா?

      

நாம் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது நோய்க்கான காரணம் உட மனதுதான் காரணமாக என்ற சந்தேகம் ஏதாவது ஒரு தருணத்தில் ஏற்படும்.
உடல் உறுப்புகளில் தோன்றும் கோளாறுகள் நீக்கினால் போதும் நோய் நீங்கி விடும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. தனக்கு ஏற்பட்ட நோய் குணமாகமால் நீடிக்கும் போதுதான் ‘இந்த நோய்க்கு மனசுதான் காரணமாக இருக்குமோ?’  என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் நோயாளிகள் கூறும் குறிகளால் மருத்துவர் குழம்பி போய் ‘நீங்கள் ஒருமனநல மருத்துவரை சென்று பாருங்கள்!’ என்று பல நோய்களுக்கு பரிந்துரை செய்துவிடுவர். இதற்கு காரணம் தான் மேற்கொண்ட பரிசோதனைகள் நோயை ‘டயக்நோசிஸ்...’ செய்ய முடியாமல் போவதும், தான் கொடுத்த மருந்து பயன் இல்லாமல் போவதும்தான்.
நம் உடல் நலத்தில் மையமாக செயல்படுவது ரத்தம் ஓட்டம்தான் என்ற எண்ணம் அனைவரின் மனதில் பரிந்து போன கருத்தாக பலரிடம் இருக்கிறது. எனவே தான் எந்த ஒரு நோயாக இருந்தாலும் ஏராளமான இரத்த பரிசோதனைகள் செய்து நோய்களை கண்டுபிடிக்கவும். நோய் குணமாக்களை அளவு கோளிடுவதிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல...! உடல் ஆரோக்கியத்தின் மையப்பகுதி நரம்பு மண்டலம்தான்! மூளை பிறப்பிக்கும் ஆணைகளுக்கு தக்கவாறு நம் உடல் நலம் பேணப்படுகிறது.
நம் உடல் உறுப்புகள் எந்த இடத்திலும் பாதிப்பு ஏற்படலாம். உடலில் பின்னி பிணைந்து கிடக்கும் நரம்புகள் நோய் பற்றிய சமிக்கைகளை மூளைக்கு எடுத்து செல்லும். மூளை நோய் எதிர்ப்பு திறனை கூட்ட உரிய கட்டளைகளை பிறப்பித்து நோய்களை எதிர்த்து போராட வைக்கும். நோய் எதிர்ப்பு திறன் செல் அணுக்கள் உருவாக்கி இரத்த ஓட்டத்தின் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோயும் குணமாகும். நோய் நீடித்து இருந்தால் உடலில் உள்ள நாளமுல்லா சுரப்பிகளை நோய்க்கு தகுந்தவாறு ஆணையிட்டு நோயிலிருந்து நீடித்திருக்கும் இந்த அடிப்படையே சாதாரண காய்ச்சல் முதல் புற்று நோய் வரை ஒவ்வொருவரின் தனித்தன்மைக்கேற்ப நோய்களின் கோரப்பிடியிலிருந்து விடுப்பட நரம்பு மண்டலம் தான் முதன்மையாக செயல்படுகிறது.
ஒரு மனிதன் நோய்வாய்ப்படும் போது நோய்க்குரிய அடிப்படை குறிகளை மட்டும் கூறுவார்கள். ஒரு சிலர் உடல்நலத்தில் பிரித்தியோக குறிகளையும் மனநல குறிகளையும் தனக்கே உரித்தான பாணியில் மருதுவர்களிடம் கூறுவார்கள். உதாரணமாக தைராய்டு பாதிப்பை எடுத்து கொள்வோம். தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் கூடுவது இயல்பு. அத்துடன் சருமம் வறண்டு வியர்வை இருக்காது; மன அளவில் மந்தமாக சுறுசுறுப்பின்றி இருப்பார்கள். அதே சமயத்தில் தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் உடல் இளைக்கும். படபடப்பு, அதிக வியர்வை உடல் அளவில் காணப்படும். இதில் மன அளவு பாதிப்பு மற்றும் பதற்றம் நிலைக்கொள்ளாமல் இருப்பார்கள். ஒரு நோய் என்பது உடல் உறுப்பு அளவில் மட்டுமல்ல. பொது அளவில் உடல் இயக்கத்திலும் மன அளவில் பாதிப்புகளையும், பிரதிபலிக்கும். ஒவ்வொருவரின் தனித்தன்மைக்கேற்ப வெளிப்படுத்துவார்கள்.
ஒருவருக்கொருவர் மாறுபடும் இன்றைய காலக்கட்டத்தில் உறுப்புகளின் அடிப்படையில் மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் இயக்கம் முழுமையாக ஆராயப்படுவதில்லை. எனவே நோயும் உடலை விட்டு நீங்குவதில்லை. முழுமையாக விடுதலை பெற உடல்குறிகளையும், மனக்குறிகளையும் மையமாக கொண்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நோயை நம் உடல் தன்னை தானே சரிசெய்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்வது மிக குறைவு. நோய் எதிர்ப்பு திறனை உடலில் ஏற்படுத்தி நோய்களை தடுக்கவும் நிரந்தரமாக குணப்படுத்த முயல்வது மிக சொற்பமே!
பரிசோதனை கூடத்தில் படப்படப்புடன் நின்று தனக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிட்டது என்று அறிந்தவுடன் ஒரே மாதத்தில் உடல் இளைந்து மன உளைச்சலில் அல்லல் படுவோர் ஏராளாம். நீரிழவு நோயை அதிகப்படுத்த தங்கள் மன உளைச்சலையே வித்திடுவோர் பலருண்டு. இதுவே பல நோய்களுக்கு பொருந்தும். உடலும் மனமும் இணைந்து செயல்படுவதை ஒவ்வொரு தனி மனிதனிடமும் வித்தியாசமான குறிகளுடன் காணமுடியும்.
மருத்துவ துறைகளில் ஹோமியோபதி மருத்துவத்தில் மட்டும்தான் நோய்குறிகளை மட்டும் வைத்து சிகிச்சை புரிவதில்லை. உடல் குறிகளுக்கும், மனக்குறிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஹோமியோபதி மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரை செய்கிறார்கள். மனிதனை நலமாக்குவதுதான் ஹோமியோபதி மருந்துவத்தின் மைய கருத்தாக இருக்கும். எனவேதான் பல தீர்க்க முடியாத வியாபதிகள் கூட தீர்வு பெற்று ஆச்சரியப்பட வைக்கின்றன.
ஒரு நோய் ஆற்றல் சக்தியாக உடலில் தோன்றுவது படிப்படியாகத்தான் தோன்றும். அப்படிப்பட்ட நோய் ஆற்றல் ஒரு தனி மனிதனின் உடல் இயக்கத்திலோ அல்லது பரம்பரை தன்மை கொண்டதாகவோ இருக்கும். இந்த பாதிப்புகள் முதலில் வெளிப்பாடாக கொண்டு வருவது மனம் மட்டுமே. அப்படிப்பட்ட நோய் சக்தியை மருந்துகளை மூலப் பொருள்களாக அளித்து சிகிச்சை பெற்றால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். நிரந்தர குணம் பெற சக்தி வடிவில் தான் மருந்துகளை வழங்க வேண்டி இருக்கும். எனவே தான் ஹோமியோபதி மருத்துவத்தில் எந்த ஒரு மருந்தாக இருந்தாலும் மூலப் பொருள்களை குறைத்து படிப்படியாக வீரியப்படுத்தி ‘மருந்து சக்தியாக’ ஒத்த மருத்துவ முறையில் அளிக்கப்படுகின்றன. நோய்கள் முழுமையாக குணம் பெருகின்றன.
இவைகள் பல நோய்களின் தலைப்பில் உடலும் மனமும் எவ்வாறு பின்னணி பிணைந்து செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். குணம் பெற இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியும், தன்னைத்தானே தயார் செய்து ஆரோக்கிய நிலையை அடையலாம் என்பதை பல்வேறு சிகிச்சை முறைகளில் தெளிவாக அறியலாம்.

 

 

 
 

 

 

 

 

 
 

 

 

 
 

 

Homoeotimes
6, LLoyd's IInd Lane
Royapettah, Chennai
Tamil Nadu. India.
 
Pin : 600 014
 
Phone : 91-44-28113300
 
Email: homoeotimes@gmail.com